Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஃபனகோஷி ஷோடோகான் அகில இந்திய கராத்தே போட்டி

கோலாலம்பூர் மே 9-
2025 ஃபனகோஷி ஷோடோகான் அகில இந்திய கராத்தே போட்டி அண்மையில் கல்கத்தா,ஹவுராவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கராத்தே போட்டியில் 350 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியதாக மலேசியா ஒக்கினாவா ஃபிரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தைச் சேர்ந்த ஹான்சி டாக்டர் விஜய் கூறினார்.


மலேசியா, இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக ஷோடோகன் கராத்தே சங்கம் இந்த போட்டியை ஏற்பாடு செய்ததாக இப்போட்டியில் ஆலோசகருமான அவர் சொன்னார்.


இந்த போட்டியில் இப்போட்டியின் நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப குழுவின் இயக்குனருமான ஹான்சி சன்ஜிட் கேஆர் சாஹா முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டார். இப் போட்டியை வெற்றி அடையச் செய்த அனைத்து தரப்பினர் மற்றும் போட்டியாளர்களுக்கு டாக்டர் விஜய் நன்றி கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular