Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய சமூக மன்ற கூட்டத்திற்கு துணைப் பிரதமர் தலைமை தாங்கினார்

புத்ரா ஜெயா மே 9
2025 தேசிய சமூக மன்ற கூட்டத்திற்கு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி இன்று தலைமை தாங்கினார்.இந்தக் கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.


தேசிய அளவில் சமூக கொள்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்த மன்றம் முக்கிய பங்காற்றுவதாக செனட்டர் சரஸ்வதி கூறினார். அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு சமூக கொள்கைகளை கையாள்வதில் இந்த மன்றம் முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில் இந்திய மாணவர்கள் கல்வியை கைவிடும் பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அவர் சொன்னார். இப்பிரச்சனைக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என துணை பிரதமரிடம் தாம் வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம், அரசு சார்பற்ற நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகிய தரப்பினரின் கூட்டு முயற்சியில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார். இந்த கூட்டத்தில் துணை பிரதமர் மற்றும் டத்தோ நோராயினி ஆகியோருடன் சில விவகாரங்கள் குறித்து தாம் பிரிவாக பேசியதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular