
புத்ரா ஜெயா மே 6
பொருளாதார அமைச்சர் ராபிசி ரம்லி இன்று முதல் மீண்டும் தமது பணிக்கு திரும்பியதாக தகவல் ஒன்று கூறியது. இருப்பினும் தமது விடுமுறைக்கான காரணம் குறித்து ராபிசி விளக்கம் தருவாரா என்பது குறித்து தெரியவில்லை என அந்த தகவல் தெரிவித்தது. அண்மைய பிகேஆர் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி அடைந்ததை தொடர்ந்து பிகேஆர் துணைத் தலைவருமான ராபிசி நீண்ட விடுமுறையில் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
கட்சியின் தொகுதி தேர்தல்களில் முடிவுகளின் அதிர்ச்சி அடைந்ததை தொடர்ந்து தமது அமைச்சர் பதவியை ராபிசி ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இருப்பினும் ராபிசி விடுமுறையில் சென்றுள்ள விவகாரம் குறித்து சர்ச்சையாக வேண்டாம் என பிரதமரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.


