செப்பாங் மே 6
உலகளாவிய சுற்றுச்சூழல் கணக்காய்வில் 10க்கு 10 மதிப்பெண்கள் பெற்று ஏர் ஆசியா சாதனை படைத்துள்ளது. உலகளவில் 142 விமான நிறுவனங்களில் 25 முன்னணி விமான நிறுவனங்கள் பட்டியலில் ஏர் ஆசியா இடம்பெற்றுள்ளது.
நிலையான விமான போக்குவரத்து துறையில் தனது தலைமைத்துவத்தின் சாதனையை இதன் மூலம் ஏர் ஆசியா வெளிப்படுத்தியுள்ளது.

விமான நவீனமயம், எரிபொருள் திறன் புதுமை உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றில் அடங்கும்.இதனிடையே ஒவ்வொரு சுற்றுச்சூழல் விவகாரங்களில் ஏர் ஆசியா குழுமம் தனது திறமையை வெளிப்படுத்துவதாக 42kft.com தலைமை செயல்முறை அதிகாரி ஜியோப்ரி தோமஸ் கூறினார்.ஏர் ஆசியாவின் இந்த சாதனையை தாம் பெரிதும் பாராட்டுவதாக அவர் சொன்னார்.சுற்றுச்சூழல் உணர்வுள்ள விமான போக்குவரத்து துறையில் ஏர் ஆசியா முன்னணி விமான நிறுவனமாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஏர் ஆசியாவின் இந்த சாதனைக்கு ஏர் ஆசியா பணியாளர்களின் பங்கு பாராட்டக்கூடியது என அவர் தெரிவித்தார். ஏர் ஆசியாவிற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் பாராட்டக்கூடிய ஒன்று என ஏர் ஆசியா தலைமை நிலைத்தன்மை அதிகாரி யாப் மூன் சிங் கூறினார்.நிலைத்தன்மையான விமான போக்குவரத்து கொள்கையை வடிவமைப்பதில் ஏர் ஆசியாவின் தலைமைத்துவ பங்கை இது சித்தரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தாங்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வரப்போவதாக அவர் சொன்னார். அண்மைய தனது ESG மதிப்பீட்டில் 5-ல் 3.5 பெற்று கேப்பிட்டல் ஏ சாதனை படைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இது போன்று சாதனைகளை கேப்பிட்டல் ஏ தொடர்ந்து படைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


