
வான்வெளி மூடப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் இந்தியாவின் அமிர்தசரஸ் நகரங்களுக்கான விமான சேவைகளை பாத்திக் ஏர் தற்காலிகமாக ரத்து செய்தது.
பாகிஸ்தானின் வான்வெளி மூடப்பட்டதை தொடர்ந்து இவ்விரு நகரங்களுக்கான மே 7 மற்றும் மே 8 2025 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாத்திக் ஏர் செய்தி அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்ற நிலையை தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட தரப்பினுடன் தொடர்பு கொண்டு நிலைமையை பாத்திக் ஏர் ஒழுக்கமாக கண்காணித்து வருவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
புதிய தகவல்கள் கிடைத்த பின்னர் பயணிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும் என அந்த அறிக்கை கூறியது.
இந்த அசௌகரியத்திற்காக பாத்திக் ஏர்
மன்னிப்பு கூறுவதோடு பயணிகள் புரிதலுக்காக நன்றி கூறுவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
ஊடக கேள்விகளுக்கு
pr@batikair.com.my அகப் பக்கத்தில் வலம் வரலாம்.
பாத்திக் ஏர் பற்றி-பாத்திக் துரிதமாக விரிவடைந்து வரும் ஒரு மலேசிய விமான நிறுவனமாகும்.

செப்பாங் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் ஆகியவற்றிலிருந்து பாத்திக் ஏர் தனது விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
தனது முக்கிய மையமான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா கண்டங்களைச் சேர்ந்த நகர்களுக்கு பாத்திக் ஏர் விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
பாத்திக் ஏர் 6 A330-300 மற்றும் 46 B737-8/800 ரக விமானங்களை கொண்டு தனது சேவையை மேற்கொண்டு வருகிறது.
20 நாடுகளில் 60க்கும் மேற்பட்ட நகர்களுக்கு பாத்திக் ஏர் சிறகடித்து வருகிறது.
2023-ல் 45 லட்சம் பயணிகள் மற்றும் 2024-ல் 66 லட்சம் பயணிகளை பாத்திக் ஏர் கொண்டு சென்றுள்ளது.
பாத்திக் ஏர் அனைத்துலக விமான போக்குவரத்து சங்கத்தில்(IATA) உறுப்பியம் பெற்றுள்ளது.
இந்தோனேசியாவின் லையன் ஏர் குழும நிறுவனத்தின் கீழ் பாத்திக் ஏர் இயங்கி வருகிறது.


