Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோலாலம்பூர்-அல்மாட்டி விமான சேவை வாரத்திற்கு 5 முறையாக அதிகரிப்பு!

பயணிகளின் தேவை உயர்வு கண்டதை தொடர்ந்து ஏர் ஆசியா எக்ஸ் கோலாலம்பூர்-அல்மாட்டி நகருக்கான விமான சேவையை வாரத்திற்கு 5 முறையாக அதிகரித்துள்ளது.
கோலாலம்பூர்-அல்மாட்டி விமான சேவையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை ஏர் ஆசியா எக்ஸ் செய்தது.
மலேசியா மற்றும் கஜகஸ்தான் இடையே பயணிகள் தேவை அதிகரிப்பால் அடுத்த கால் ஆண்டில் 27,000 இருக்கைகளை ஏர் ஆசியா எக்ஸ் வழங்குகிறது.
இந்த விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிப்பால் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா இடையே உறவுகள் மேலும் வலுவடைகிறது.
கோலாலம்பூர்-அல்மாட்டி நகருக்கு நேரடியாக சிறகடிக்கும் ஒரே விமான நிறுவனம் ஏர் ஆசியா எக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரடி விமான சேவையை கடந்த 14 மார்ச் 2024-ல் ஏர் ஆசியா எக்ஸ் தொடங்கியது.
இந்த பாதைக்கான விமான சேவையை தொடங்கிய அந்நாள் முதல் இந்நாள் வரை பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விமான சேவையின் மூலம் மத்திய ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா இடையே உறவுகள் மேலும் வலுவடைந்து வருகிறது.
இதனிடையே மத்திய ஆசியாவிற்கான விமான சேவையை மேற்கொள்வதில் ஏர் ஆசியா எக்ஸ் வெற்றி கண்டுள்ளதாக ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பெஞ்யாமின் இஸ்மாயில் கூறினார்.
இதனிடையே மத்திய ஆசியாவிற்கு சிறப்பான விமான சேவை வழங்குவதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பெந்னியாமின் இஸ்மாயில் கூறினார்.
இவ்விரு பிராந்தியத்திற்கு இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த விமான சேவை துணை புரியும்ஜன என நம்பிக்கை தெரிவித்தார்.


அல்மாட்டியை சேர்ந்த பயணிகள் இப்பொழுது ஏர் ஆசியா பயணிக்கும் 130 நகர்களுக்கு எளிதில் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டில் மலேசியா ஆசியானை தலைமை ஏற்க விருப்பதால் கோலாலம்பூர்-அல்மாட்டி தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular