
இங்கிலாந்து குனார்ட் நிறுவனத்தின் குயின் மேரி 2 சொகுசு கப்பலில் பயணம் செய்தவர்கள் ‘நோரோ’ என்னும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இந்தத் தொற்று பாதிப்பால் பயணிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி சொகுசு கப்பலில் உள்ள 250 சுற்றுலா பயணிகளுக்கும், 20 சிப்பந்திகளுக்கும் இந்த நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதும், மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளாதபட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு என தெரிவித்துள்ளனர்.
தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.


