Thursday, November 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தென் கொரிய மண்ணில்திருவள்ளுவர் சிலை திறப்பு.

கொரிய தமிழ்ச் சங்கம்
சார்பில், தென் கொரியாவில்,
‘ முதலாம் பன்னாட்டு
இந்திய – தமிழ் – கொரிய ஆய்வு மாநாடு 2026
கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 205 ஆம்
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ‘அக்டோபர் 31, 2026 அன்று டேஜான் அருகிலுள்ள ஓசோங் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றன.

கொரிய தமிழ்ச் சங்கம்,
கவிஞர் முனைவர் ஆலந்தூர். கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம், விஜிபி
உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள்
இணைந்து, இவ்விழாவினை நடத்தின!

இதுவரை, உலகெங்கும்
பல்வேறு நாடுகளில், 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்,
செவாலியர் டாக்டர். விஜி. சந்தோசம் அவர்கள், 205 ஆம் திருவள்ளுவர் சிலையினைத் தென் கொரிய மண்ணில் திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில்,
தென் கொரியாவின், இந்திய தூதரக அதிகாரி திரு. சுரேஷ் குமார் அவர்கள், சுங்சொங்புக்தோ பயோ சி.எஸ். மையத்தின் தலைவர். புரவலர் லியூ ஜெ யொங், சுங்ஜூ மாகாண கல்வியாளர் கிம்தோக்யோ, மேனாள் இலண்டன் மேயர் திரு. அப்பு தாமோதரன், சென்னையின் புகழ் பெற்ற மருத்துவர். திரு. சொக்கலிங்கம்,
பேராசிரியர். உலகநாயகி பழனி, கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர். அரவிந்த ராஜா, நிறுவனத் தலைவர் முனைவர். ராமசுந்தரம்
முனைவர். மோ. பாட்டழகன், துணைத்தலைவர் தெ. விஜயலட்சுமி, பொருளாளர் பீ. ஜெரோம், செயலாளர் முனைவர். செலஸ்டின் ராஜா, இந்தியத் தொடர்பாளர் முனைவர். பிரபாகரன் சக்ரா உணவகத்தின் உரிமையாளர் திருமதி. சாந்தி பிரின்ஸ்,
கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற அயல் நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில், ஆய்வரங்கம், கலையரங்கம், மரபு நடைப் பயணம் ஆகியவை இடம் பெற்றன.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் கூறுகையில்,
” தொழில் செய்து தொண்டு செய்வோம் என்ற நோக்கில் உலகெங்கும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி தமிழ் மொழியினை வளர்த்து வருகின்றோம்! இன்று,
205 ஆவது சிலையினை, தென் கொரிய மண்ணில் நிறுவுவதனை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்!
அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலைக் கொடுத்த வள்ளுவரது நெறிகளைக் கைக்கொண்டு, மதத்திற்கு அப்பாற்பட்ட நூலாகத்
திருக்குறளைக் கருதவேண்டும்” என்றார்!

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, சங்க நிர்வாகிகள், பன்னாட்டுத் தொடர்பாளர் தாமோதரன் ஆகியோர்
ஒருங்கிணைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular