Friday, October 9, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வானில் வீரச்செயல்! கூரிய ஆயுதத்தால் காயமடைந்தும் 180 பேரை காப்பாற்றிய இந்திய மகன்!

கோலாலம்பூர் அக் 9

வானில் நடந்த பயங்கரம்! கேப்டனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய துணை விமானி – 180 உயிர்களை காப்பாற்றிய அதிரடி நடவடிக்கை

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த Fly Dubai FZ1073 மானத்தின் கேப்டன் இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார்  39 வயது துணை விமானி  ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி வயது 29) என்பவர் ஆவர். 

நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, துணை விமானி திடீரென மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கினார்.அவரது தலை, கைகள் மற்றும் உடலின் பல பகுதிகளில் கொடூரமாகக் தாக்கி காயங்கள் ஏற்பட்டன.

ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு, விமானத்தை கடத்தி, பாதி வழியில் விமானத்தை 17,000 அடிக்கும் கீழே இறக்கி, தரையில் மோதச் செய்து சுமார் 180 பேரைக் கொல்ல திட்டமிட்டார்.

இந்த கேப்டன் ஸ்மித் மச்சார் ரத்த வெள்ளத்தில் இருந்தும் அவசர எச்சரிக்கை அனுப்பி காக்பிட் (விமானி அறை) கதவைத் திறந்து பயணிகளின் உள்ளே அனுமதித்தார்.

இஸ்ரேலிய பிளம்பர் (Plumber) யானிவ் ஹயூன்  உள்ளிட்ட 2 பேர் காக்பிட்டிற்குள் (விமானி அறை) நுழைந்து துணை விமானியை மடக்கி பிடித்தார்கள்.

விமானத்தில் இருந்த பல் மருத்துவர், ரத்தம் கசிந்து கொண்டிருந்த விமானி ஸ்மித் மச்சாருக்கு உடனடியாக முதலுதவி செய்து, அவரது உயிரைக் காப்பாற்ற உதவினார்.

பணி முடிந்து பயணம் மேற்கொண்ட 2  முன்னாள் விமானிகள், சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இதன் மூலம் விமானத்தில் இருந்த 180 பயணிகளும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.

சம்பவம் தொடர்பாக சவுதி அதிகாரிகள் துணை விமானியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அதிகாரப்பூர்வ விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விதிமீறல் சர்ச்சை இஸ்ரேல் சட்டப்படி  இஸ்ரேலுக்கு நட்பு நாடு பைலட்களை மட்டும்தான் பணியமர்த்தனும் ஓமான் பைலட் எப்படி வந்தார் என்பது விசாரணையில் உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்பான ஒரு தனி விவகாரத்தில், ஈரானுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகக் கூறியுள்ளார்.

Fly Dubai நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர் அறிக்கை வரல விதிமீறல் நடந்ததா என விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

இனி விமானத்தில் எப்படி பாதுகாப்பாக பயணம் செய்வது?

காக்பிட் (விமானி அறை)  பாதுகாப்பு காக்பிட்டுக்குள் கூர்மையான ஆயுதங்கள் எப்படி வந்தது என கேள்வி எழுகிறது.

பைலட் பின்னணி சோதனை இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு போகும் விமானங்களில் பைலட் தேர்வு கடுமையாக்கப்படலாம்.

அவசர நடைமுறையின்படி, கேப்டன் ஸ்மித் கடுமையாகக் காயமடைந்திருந்தபோதிலும் அவசரக் கதவைத் திறந்து பயணிகளின் உதவியை நாடியது ஒரு முக்கியமான பாடமாகும்.

விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது துபாய் அரசு Fly Dubai    நிறுவனம் அறிக்கை கிடைத்தவுடன் முழு பொறுப்பும் ஏற்குமா?

ஒரு பெரிய விமானப் பேரழிவைத் தவிர்த்தது உயிரைப் பணயம் வைத்து நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலையும், இக்கட்டான நேரத்தில் உதவிய அனைவரின் மனிதநேயத்தையும் பாராட்டி, மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா” ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular