
கோலாலம்பூர் பிப் 17
அண்மையில் சென்னையில் நடைபெற்ற 6 ஆவது சேலஞ்சர் ஸ்போர்ட்ஸ் கப் இன்டர்நேஷனல் சிலம்பம் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் ஜாலான் புக்கிட் காஜாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இந்த கராத்தே போட்டி சென்னை சந்தோஷம் உள் விளையாட்டு அரங்கில் 9 பிப்ரவரி 2025-ல் முன்னாடி பெற்றது.
இந்த போட்டியில் ஒற்றைக்கம்பு பிரிவில் யோகிஷா சிறப்பாக விளையாடி தங்கம் வென்றார்.
மலேசியா, ஸ்ரீ லங்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 700 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசான் டாக்டர் டி. சுரேஷ், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஆசான் கலைமாமணி எஸ். கவிதா ஆகியோருக்கு தாம் நன்றி கூறுவதாக ஹான்சி டாக்டர் விஜய் கூறினார்.

மேலும் மலேசிய குழுவிற்கு உறுதுணையாக இருந்த மலேசிய ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் ஆலோசகர் டத்தோ அய்மானுடின், மலேசிய குழுவின் தலைவர் டத்தோ என்டி ஆகியோருக்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கார்த்திக் நாராயணன், இம்ரான் ஹாருன், அலெக்ஸ், நந்தகுமார் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


