Tuesday, April 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஆக்ராவில் நடைபெற்ற அனைத்துலக கராத்தே போட்டியில் கங்கார் பூலாய் தமிழ் பள்ளி மாணவர்கள் சாதனை

கோலாலம்பூர் ஜன 31
அண்மையில் ஆக்ரா, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற இன்டோ-கொன்டினென்டல் அனைத்துலக கராத்தே போட்டியில் ஜொகூர் பாரு,கங்கார் பூலாய் தமிழ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
இந்த போட்டியில் கங்கார் பூலாய் தமிழ் பள்ளியைச் சேர்ந்த ஹரிமிலா கிரிஸ்செல் ஷர்மா ரெவி தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
அதே பள்ளியைச் சேர்ந்த ஷார்மிளா மிக்காலியா ஷர்மா ரெவி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றார்.
மேலும் இந்த போட்டியில் பூலாய் ஜெயா இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐ.லாவென்டர் தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார்.
இந்தப் போட்டியின் ஏற்பாட்டு குழுவை சேர்ந்த ஆக்ராவின் சுர்ஜிட் ஷாரி மற்றும் நிர்மல் கோசுவாமி ஆகியோருக்கு மலேசியாவின் சிறப்பு பிரமுகரான கியோஷி ரவி கன்னியப்பன் நன்றி கூறினார்.


இந்தப் போட்டிக்கு முழுமையான ஆதரவு வழங்கிய கிரிமெக்லின் மென்டெனன்ஸ் செர்விசஷ் நிறுவனத்தின் இயக்குனர் குணசேகரன் செல்லதுரை, குஜராத்தை சேர்ந்த மாஸ்டர் கௌதம் மற்றும் சௌதர்ன் டைகர்ஸ் கராத்தே குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த போட்டியில் இந்தியா, ஸ்ரீ லங்கா, நேபால் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 15,000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular