Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பல்லின சமூகங்களின் ஒற்றுமையை வலுப்படுத்த முக்கிய பங்காற்றுவோம்!

பினாங்கு ஜன 31
இந்நாட்டில் உள்ள பல்லின சமூகங்களின் ஒற்றுமையை வலுப்படுத்த பினாங்கு பாஸ் ஆதரவு பேரவை முக்கிய பங்காற்றும் என அது தலைவர் கே. ஜெயராமன் கூறினார்.
இந்த நிலையில் நாடு மற்றும் மக்களின் ஒற்றுமைக்காக பாஸ் தலைமைத்துவம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பினாங்கு பாஸ் ஆதரவு பேரவை முழுமையான ஆதரவு வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாஸ் கட்சியின் தலைமைத்துவத்திற்கு பினாங்கு பாஸ் ஆதரவு பேரவை எப்பொழுதுமே விசுவாசமாக இருக்கும் என அவர் உறுதியளித்தார்.
அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஒரு பங்காளி கட்சி என்ற வகையில், எதிர் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற தாங்கள் கடுமையாக பாடுபட போவதாக அவர் சொன்னார்.
நீதி, நேர்மை மற்றும் நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளை பினாங்கு பாஸ் ஆதரவு பேரவை வலிமையுடன் கடைப்பிடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தலில் பினாங்கை கைப்பற்ற பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கடுமையாக பாடுபட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்திற்கு பினாங்கு பாஸ் ஆதரவு பேரவை துணை நிற்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular