
கோத்தா பாரு ஜன 31
பொங்கல் கொண்டாட்டம் இந்நாட்டில் பல்லின கலாச்சாரத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தும் என பிகேஆர் மகளிர் அணி உச்ச மன்ற உறுப்பினர் கேரன் கஸ்தூரி கூறினார்.
இந்த பொங்கல் கொண்டாட்டம் இந்நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையே ஒற்றுமை உணர்வை மேலோங்க செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் இங்கு கெரில்லா தோட்டத்தில் பொங்கல் கொண்டாட்ட விழாவை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
நாட்டில் ஒருவருக்கு ஒருவருக்கிடையே ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டில் ஒற்றுமை தான் நமது வலிமை என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது.
பல இனங்கள் வாழும் இந்நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் அமைதிக்கு அடித்தளமாக இருந்து வருகிறது.
பொங்கல் போன்ற கொண்டாட்டங்கள் இதற்கு தூண்டுகோலாக இருந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பொங்கல் கொண்டாட்டத்திற்கு தம்மை அழைத்த பிகேஆர் தானா மேரா தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ சுப்பாராடிக்கு அவர் நன்றி கூறினார்.


