Tuesday, April 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நடைபெற்ற அனைத்துலக பொது கராத்தே போட்டியில் சீதாலட்சுமி தங்கம் வென்றார்

கோலாலம்பூர் ஜன 24
அண்மையில் சென்னையில் நடைபெற்ற 14 ஆவது ரோயல் செலன்ஜர்ஸ் அனைத்துலக பொது கராத்தே போட்டியில் மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி குமார் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இந்த அனைத்துலக போட்டியில் 28 வயதுடைய சீதாலட்சுமி குமார் குமித்தே சீனியர் பிரிவில் தங்கப் பதக்கமும் மற்றும் காத்தா சீனியர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.


இந்தப் போட்டி கடந்த ஜனவரி 19 ஆம் தேதி 2025 தமிழ்நாடு சந்தோம் மொன்போர்ட் அரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1200 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட இந்தியப் பிரமுகர்கள் ரேன்ஷி கார்த்திகேயன், போட்டியில் இயக்குனர் ரேன்ஷி வனிதா கார்த்திகேயன் ஆகியோருக்கு மலேசிய ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் தலைவர் கியோஷி டாக்டர் எஸ். விஜய் நன்றி கூறினார்.
இப்போட்டிக்கு ஆதரவு வழங்கிய மலேசிய பிரமுகர்களான கெடா கராத்தே சங்கத்தின் தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின், துணைத் தலைவர் டத்தோ முனியாண்டி மற்றும் மலேசிய ஸ்பிட் ஃபாவர் கராத்தே சங்கத்தின் தலைவர் ரேன்ஷி கதிரவன் ஆகியோருக்கு அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் அனைவருக்கும் அவர் நன்றி நல்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular