
அண்மையில் இங்கு நடந்த 2 ஆவது ஹிஜாவ் குனிங் பொது கராத்தே போட்டியில் யோகிஷா தனபாலன் தங்கம் வென்று பெருமை சேர்த்தார்.
இந்த போட்டியில் யோகிஷா ஜூனியர் காத்தா பிரிவில் தங்கம் மற்றும் ஜூனியர் குமித்தே பிரிவில் வெண்கல பதக்கங்களையும் தட்டி சென்றார்.
மற்றொரு போட்டியாளர் காயத்ரி சுரேஷ் ஜூனியர் குமித்தே பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் எட்டு வயதுடைய விசுவாமித்திரர் சிவகுமார் குமித்தே பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
அதேவேளையில் 14 வயதுடைய தனிஷா குமித்தே பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்த போட்டியை வெற்றி அடைய செய்த போட்டி ஏற்பட்டாளர் சிஹான் சுரேஷ்குமார் மற்றும் சிஹான் கோமகன் ஆகியோருக்கு மலேசிய ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் தலைவர் கியோஷி டாக்டர் விஜய் நன்றி கூறினார்.
மேலும் இந்த போட்டியில் பிரமுகர்களாக கலந்து கொண்ட கெடா கராத்தே கழகத்தின் தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின், மாஸ்டர் நடராஜா, மாஸ்டர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், வெற்றியாளர்கள் மற்றும் முழுமையான ஆதரவு வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் நன்றி நல்கினார்.


