
கோலாலம்பூர் ஜன 23
எதிர்வரும் தைப்பூச கொண்டாட்டத்திற்கு கெடாவில் பொது விடுமுறை அறிவித்துள்ள கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சானுசிக்கு பாஸ் ஆதரவு பேரவை நன்றி தெரிவித்துக் கொண்டது.
எதிர்வரும் பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை நாடு தழுவி நிலையில் தைப்பூச கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
தைப்பூச கொண்டாட்டத்தையோட்டி கோலாலம்பூர், புத்ரா ஜெயா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பேராக், பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் பொது விடுமுறை அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஸ் கட்சி தலைமையிலான கெடா மாநிலத்தில் அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சானுசி பொது விடுமுறையை அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பாஸ் கட்சி இதர சமூகங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து வருகிறது என்பதை இந்த அறிவிப்பு காட்டுவதாக பாஸ் ஆதரவு பேரவை கூறியது.
கெடா மாநிலத்தில் வசித்து வரும் இந்திய சமூகத்தினருக்கு இது ஒரு நற்செய்தி என அந்த பேரவை தெரிவித்தது.
இதர சமூகங்களின் நலங்களுக்கும் பாஸ் கட்சி முன்னுரிமை வழங்குவதை இந்த அறிவிப்பு சித்தரிப்பதாக அந்த பேரவை தெரிவித்தது.
பாஸ் கட்சி தலைமையிலான மாநிலங்களில் உள்ள இந்திய சமூகத்தினர் மகிழ்ச்சியுடன் இருந்து வருவதாக அந்த பேரவை குறிப்பிட்டது.


