Tuesday, April 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கர்நாடகாவில் நடந்த அனைத்துலக கராத்தே போட்டியில்மாஸ்டர் விஜய், யோகிஷா தங்கம் வென்றனர்!

கோலாலம்பூர் ஜன 13
அண்மையில் இந்தியா, கர்நாடகாவின் உடுப்பியில் நடந்த புடொகான் RBKA அனைத்துலக கராத்தே போட்டியில் கெடா கராத்தே கழகத்தின் மாஸ்டர் விஜய் மற்றும் யோகிஷா தனபாலன் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.
இந்தப் போட்டியில் மாஸ்டர்ஸ் சீனியர் பிளேக் பெல்ட் பிரிவில் கியோஷி மாஸ்டர் விஜய் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் பெண்களுக்கான ஜூனியர் காத்தா பிரிவில் யோகிஷா தனபாலன் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் பெண்களுக்கான ஜூனியர் குமித்தே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமது திறமையை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியின் ஏற்பாட்டாளர்களான வசந்த் செட்டி, விஜய் செட்டி விஜய் பூஜாரி ஆகியோருக்கு மாஸ்டர் விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


அதே வேளையில் இந்தப் போட்டிக்கு ஆதரவு வழங்கிய கெடா கராத்தே கழகத்தின் தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின், துணைத் தலைவர் டத்தோ முனியாண்டி, போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் தமது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.


ஜன 4 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, நேபால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1500 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இந்த அனைத்துலக கராத்தே போட்டியை பைனுர் எம்எல்ஏ குருராஜ் காந்திஹொலே அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular