
மங்களம் பொங்க.. மகிழ்ச்சி வெள்ளம் பெருக.. எண்ணியது ஈடேற தமது தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை உலகத் தமிழர்களுக்கு பாக்காத்தான் ஹராப்பன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தெரிவித்து கொண்டார்.
கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்.
பொங்கல் பானை பொங்கி வழிவது போல உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், மகிழ்ச்சியிலும் செல்வமும் பொங்கி வழியே வாழ்த்துக்கள்.
உழவனுக்கு ஒரு திருநாளாம்… உலகம் போற்றும் நன்னாளாம்… சூரியனை வணங்கி இந்த இனிய காலை குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை நமது உள்ளங்களில் புதிய நம்பிக்கைகளையும் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களையும் கொண்டு வர நாம் இறைவனை பிரார்த்திப்போம்.
அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தளைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க தமது இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குணா தெரிவித்துக் கொண்டார்.


