
மலாக்கா ஜன 6
அண்மையில் இங்கு நடந்த முதலாவது ஷோரின் ரியூ பொது கராத்தே போட்டியில் கெடா கராத்தே கழகத்தை சேர்ந்த ரிஷாலினி குமார் மற்றும் யோகிஷா தனபாலன் தங்கப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தனர்.
இந்த போட்டியில் தாமான் செலாயாங் இடைநிலைப் பள்ளியை சேர்ந்த விஷாலினி குமார் சீனியர் காத்தா பிரிவில் தங்கம் மற்றும் சீனியர் குமித்தே பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பதக்கம் வென்றார்.
அதே வேளையில் ஜாலான் புக்கிட் காஜாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் ஜூனியர் காத்தா பிரிவில் தங்கம் மற்றும் சீனியர் காத்தா பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றார்.
இந்தப் போட்டியில் சிலாங்கூர், மலாக்கா, கெடா மற்றும் கூட்டரசு பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 250 போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக மாஸ்டர் விஜய் கூறினார்.

மேலும் 17 அமைப்புகள் இந்த போட்டியில் பங்கு பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் போட்டிக்கு சிறப்பு வருகை புரிந்த மலேசிய கராத்தே சம்மேளன தலைவர் டத்தோ வீரா நூர் அஸ்மி,ஷோரின் ரியூ கராத்தே கழகத்தைச் சார்ந்த டத்தோ சின் மொக் சுங், இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர் சிஹான் சாமிநாதன், சிஹான் விக்ரம சூர்யா, கெடா கராத்தே கழகத்தின் தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின், வெற்றியாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


