
மலேசிய இந்து சங்க கோப்பெங் வட்டாரப் பேரவையின் பொங்கல் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த பொங்கல் விழா கொண்டாட்டம் எதிர்வரும் ஜனவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை இங்குள்ள அர்ஜுனேஸ்வரர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற உள்ளதாக மலேசிய இந்து சங்கம் கோப்பெங் வட்டாரப் பேரவையின் தலைவர் ‘விவேக ரத்னா’ பெ. சரஸ்வதி கூறினார்.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் நமது இந்து கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொங்கல் வைத்தல், கோலம் போடுதல்,உரி அடித்தல், தோரணம் பின்னுதல், பூ பின்னுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன.
மேலும் 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டியும் இடம்பெறும்.
அதே வேளையில் சிலம்பக் கலை செயல் விளக்கம் இடம்பெறுவதோடு பரதநாட்டிய நடனங்களும் இடம்பெறும் என அவர் சொன்னார்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு விருந்தோம்பல் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
ஆகையால் இந்த பொங்கல் கொண்டாட்டம் வெற்றியடைய செய்ய திரளாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கோப்பெங் வட்டார இந்திய சமூகத்தினரை சரஸ்வதி கேட்டுக்கொண்டார்.


