
பொந்தியான் டிச 18
பொந்தியானில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர் நோக்கி வரும் 3 நில விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவீன் குமாரை பிரதிநிதித்து பொந்தியான் தொகுதி மஇகா தலைவர் அஜித் கலந்து கொண்டார்.
பொந்தியான் நில அலுவலகத்தைச் சார்ந்த அஸ்ரின் மற்றும் ஷாம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண சில வழிமுறைகள் குறித்தும் பேசப்பட்டது.
பொந்தியான் மாவட்ட இந்திய அதிகாரி கயல்விழி கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டார்.


