Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சிரம்பானில் மகாகவி பாரதியாரின் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது!

சிரம்பான் டிச 18
சிரம்பானில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நெகிரி செம்பிலான் தமிழ் சங்கம் ஏற்பாட்டில் கடந்த டிச 14 சனிக்கிழமை சிரம்பான் புத்திக் ஹோட்டல் வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு பிரமுகர்களாக சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சி குழு உறுப்பினர் அருள் குமார் கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே கடந்த 1882 ஆம் ஆண்டு டிச 11 ஆம் தமிழ்நாடு எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், தமிழ் கவிதைகள், தமிழ் இலக்கியங்கள் மற்றும் ஊடகத்துறையில் புகழ்பெற்றவர் என குணசேகரன் தமதுரையில் கூறினார்.
பாரதியார் தமது வாழ்நாள் காலத்தில் பல தத்துவங்களை மக்களுக்கு எடுத்து வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


பாரதியார் யார் என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல இது போன்ற விழாக்கள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்
பாரதியாரின் தத்துவங்களை ஒரு வழிகாட்டியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கல்வியின் அவசியம் குறித்தும் நமது சமுதாயத்திற்கு பாரதியார் வலியுறுத்தி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய ஏற்பாட்டு குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழாவில் பாரதியாரின் கொள்ளு பேத்தி பேராசிரியர் டாக்டர் உமா பாரதியார், டாக்டர் டி. இளங்கோவன், நீதிபதி டாக்டர் ஜோதிமணி, நீதிபதி டாக்டர் ஜி. பாஸ்கரன், துணைவேந்தர் டாக்டர் ஜெயந்தி, கர்நாடக பேராசிரியர் டத்தோஸ்ரீ ஷர்மா, யுவராஜ், திருமதி ஜெயாரி, திருமதி விஜி, பொன். ராமசாமி, டாக்டர் கருணாநிதி, மரினா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular