
மலேசிய இந்து சங்கம், ஸ்கூடாய் பேரவை ஏற்பாட்டில் பஞ்ச புராணம் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் சிறப்பாக 06/12/24 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்வில் கந்தர்வகோட்டை கயிலை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சிவதிரு கயிலை துரைசாமி ஐயா அவர்கள் கலந்து சிறப்பு சொற்பொழிவாற்றி மாணவர்களுக்கும் நற்சான்றிதழ் எடுத்து வழங்கினார். அவர் தமதுரையில் பஞ்ச புராண பாராயணம் என்றும் குறைந்தது ஒரு லட்சம் குடும்பங்களை சென்றடைய வேண்டும் என்ற இலக்கை கொண்டு செயலாற்றுவதாக கூறினார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய துணைத் தலைவர மோகனதாசு முனியாண்டி, நிகழ்வுக்கு வருகை புரிந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார். தொடர்ந்து தலைமையுரையாற்றிய பேரவைத் தலைவர் தொண்டர்மணி க.சேகரன் நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

திறப்புரையாற்றிய ஆலயச் செயலாளர் திரு பூபாலன் ஆலயம் சமய மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு எவ்வாறு ஊக்கமளிக்கிறது என விளக்கினார்.
நிகழ்வில் ஆலயத் தலைவர் டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் திரு மாரிமுத்து, மாநில மகளிர் தலைவி விவேகரத்னா அன்புக்கரசி, ஜொகூர் பேரவைத் தலைவர் அம்மனி அம்மாள், கூலாய் பேரவைத் தலைவர் தொண்டர்மணி மூர்த்தி, மாணவர்கள், பெற்றோர்கள், பேரவை உறுப்பினர்கள் என 150 பேர் கலந்துக் கொண்டனர்.


