Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டு இம்மாதத்தில் கொண்டாடப்படவிருக்கிறது!

கோலாலம்பூர் நவ 20
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியா மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டு இம்மாதத்தில் கொண்டாடப்படவிருப்பதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மக்கள் நலன்களை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் இலக்குகள் மற்றும் முயற்சிகள் குறித்து விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று பெர்னாமாவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
வரும் நவம்பர் 22 தொடங்கி நவம்பர் 24 ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் madani di hati rakyat Disantuni எனும் கருப்பொருளில் அந்நிகழ்ச்சி நடத்தப்பட வெறுப்பதாக அவர்.
ஒரு நாட்டில் நல்லிணக்கம் ஒருமைப்பாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதனை முன்னெடுத்து செல்வதில் அமைப்பு கடந்த இரண்டு இரு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் அங்கே காட்சியகப்படுத்துகின்றோம். அதோடு இளைய தலைமுறை நேரலை ஈர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இ மூன்று நாள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒரு அங்கமாக ஆபரணங்களை பொலிவாக்கம் தொழில்நுட்பமும் அங்கு காட்சிப்படுத்தப்படும்.
அங்கு வருகை புரியும் பொதுமக்கள் தங்களின் தங்க ஆபரணங்களை தொழில்நுட்பத்தின் மூலம் இலவசமாக பொலிவாக்கவும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மற்றொரு நிலவரத்தில் ஒருமைப்பாட்டு அமைத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலோங்க செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்து மதம் சார்ந்த சில அவதூறுகளும் மனதை புண்படுத்தும் வகையிலான கருத்துக்களும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருவதால், அவற்றை கையாள்வதற்கான வழிவகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதற்கு ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சமய விவகாரம் மட்டும் மற்றும் அது தொடர்பான தீர்வுகளுக்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்து சமயம் உட்பட எந்த சமயமும் சார்ந்தோ அவதூறுகள் இருந்தால் அது குறித்து இந்த நடவடிக்கை குழு விசாரணை நடத்தும், சுமூகமான தீர்வு காணும் நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றார் அவர்.
ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் தமிழ் பள்ளி மாணவர்களுக்காக ‘jom membaca’ திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இளம்பிள்ளைகள் குறிப்பாக தமிழ் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்பு பழக்கத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று சிந்தனையை மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular