Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தீபாவளி கொண்டாட்டத்தை யொட்டி ஏர் ஆசியாவின் ஒன்றாக ஒளி வீசுவோம் பிரச்சாரம்!

செப்பாங் நவ 20
தீபாவளி கொண்டாட்டத்தை யொட்டி சமூகங்களுக்க்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்த ஒன்றாக ஒளி வீசுவோம் பிரச்சாரத்தை உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா மேற்கொண்டது.
இந்த கொண்டாட்ட காலம் முழுவதும் தனது பயணிகளுக்கு ஏர் ஆசியா தின்பண்டங்களை வழங்கி மகிழ்வித்தது.
கோலாலம்பூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட AK 6126 விமான பயணிகளுக்கு வீட்டில் செய்த லட்டு மற்றும் முறுக்கு போன்ற தின்பண்டங்கள் வழங்கப்பட்டது.
பாரம்பரிய உடை அணிந்த ஏர் ஆசியா விமான சிப்பந்திகள இன்முகத்துடன் தீபாவளி கொண்டாட்ட சூழலில் பயணிகளுக்கு இவற்றை வழங்கி மகிழ்ந்தனர்.
அதேவேளையில் தனிநபர்கள் கல்வியின் வழி தங்களின் ஆளுமையை வளர்த்துக் கொள்ள கேப்பிட்டல் ஏ-யின் கல்வி பிரிவான Outclass by Air Asia இந்த கொண்டாட்டத்தின்போது கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியது.
இந்த கொண்டாடத்தில் ஒன்றிணைந்த மலேசிய இந்து குரல் இயக்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.


இதனிடையே சமூகங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த கல்வி தூணாக நிற்பதாக கேப்பிட்டல் ஏ ( முதலீடு மற்றும் தொழில் முயற்சிகள்) தலைவரும் Outclass நிர்வாக இயக்குனருமான அய்ரின் ஓமார் கூறினார்.
கல்வியின் மூலம் தனி நபர்கள் தங்களின் தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ள தாங்கள் துணை நிற்பதாக அவர் சொன்னார்.
சவால் மிக்க உலகில் தனி நபர்கள் தொழில் திறன்களை வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்றார் அவர்.
இந்த கொண்டாட்டத்தில் ஏர் ஆசியா விமானியும் மலேசிய ஒற்றுமை இந்து குரல் இயக்கத்தின் சமூக தலைவருமான நரேஷ் பிள்ளையும் கலந்து கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular