Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புதிய சட்டத்தின் கீழ் ஆன்லைன் இணைய சேவையில் ஆபத்தான அம்சங்கள் அகற்றப்பட வேண்டும்!

கோலாலம்பூர் நவ 18
புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் சட்டத்தின் கீழ் ஆன்லைன் இணைய சேவையில் ஆபத்தாக கருதப்படும் அம்சங்கள் அகற்றப்பட வேண்டும் என பிரதமர் இலாக்கா(சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.
தற்போது ஆன்லைன் இணைய சேவை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
ஆன்லைன் இணைய சேவையில் அதிகரித்து வரும் நிதி மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்த இந்த சட்ட திருத்த மசோதா உதவும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டினார்.
ஆன்லைன் இணைய சேவை மலேசியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த சட்ட திருத்த மசோதா உறுதி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆன்லைன் இணைய சேவையில் அதிகரித்து வரும் இந்த நிதி மோசடிகளை இந்த சட்ட திருத்தம் எப்படி கட்டுப்படுத்தும் என பாக்காத்தான் ஹராப்பன் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு ஜசெக உதவி தலைவருமான குலா பதிலளித்தார்.
ஆன்லைன் இனணய சேவைகளை நடத்துபவர்கள் ஆபத்தாக கருதப்படும் அம்சங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த சட்டத் திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஆகையால் ஆன்லைன் இனணய சேவைகளை நடத்துபவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதை உறுதி செய்ய இந்த புதிய சட்டம் உதவும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது சமூக வலைதளங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சட்டவிரோத சூதாட்டம், ஏமாற்றுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆன்லைன் இணைய நிதி மோசடி குறித்து இதுவரை 52,836 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்து சம்பவங்களில் ரிம 302.1 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த குற்றச் செயல்களை முறியடிக்க தற்போது முறையான சட்டம் எதுவும் இல்லை என்றார் அவர்.
ஆனால் தற்போது வகுக்கப்பட்டு வரும் சட்டத் திருத்த மசோதா இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை காணும் என குலா நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular