Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உலகளவில் 80 நகரங்களுக்கு சிறகடிக்க பாத்திக் ஏர்-ஃபிளாய் துபாய் கூட்டு ஒப்பந்தம்!

கோலாலம்பூர் நவ 10
உலகளவில் சுமார் 80 நகரங்களுக்கு சிறகடிக்க பாத்திக் ஏர்-ஃபிளாய்துபாய் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
பயணிகள் கண்டங்கள் முழுவதும் வளமுடன் இந்த கூட்டு ஒப்பந்தம் பயணிகளுக்கு அற்புதமான மற்றும் எளிதான வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்த கூட்டு ஒப்பந்தம் வழி மலேசியா, மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய நகர்களுக்கு பயணிகள் சிறகடிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இந்த ஒப்பந்தத்தின் வழி ஃபிளாய்துபாய் விமான நிறுவன நெட்வொர்க் மூலம் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, மத்திய மற்றும் தென் கிழக்கு ஐரோப்பா உட்பட 38 நகரங்களுக்கு பயணிக்கலாம்.


இதனுடன் பாத்திக் ஏர் விமான நிறுவன நெட்வொர்க் மூலம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் மற்றும் இதர முக்கிய நகரங்களுக்கும் பயணிக்கலாம்.
இந்த நகர்களுக்கு பயணிக்கும் பயணிகள் பாத்திக் ஏர் மற்றும் ஃபிளாய்துபாய் விமான நிறுவனங்களில் டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இதனிடையே இந்த கூட்டு ஒப்பந்தம் தங்களின் பயணிகளுக்கு வசதியான போக்குவரத்து வாய்ப்புகளை வழங்கும் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
பாத்திக் ஏர்-ஃபிளாய்துபாய் விமான நிறுவனங்களின் இந்த ஒத்துழைப்பு பயணிகள் உலகளவில் எளிதில் இதர நகரங்களுக்கு பயணத்தை தொடர வாய்ப்புகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டு முயற்சி மலேசியா மற்றும் உலகளாவிய நகர்களுக்கு உறவுகளை வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கூட்டு ஒப்பந்தம் புதிய நிலையிலான விமான பயண தொடர்புகளை ஏற்படுத்தி தரும் என்றார் அவர்.
தனது பயணிகளுக்கு சிறப்பான மற்றும் சௌகரியமான பயணங்களை ஏற்படுத்தி தருவதில் எப்பொழுதுமே பாத்திக் ஏர் முன்னுரிமை வழங்கி வரும் என அவர் சொன்னார்.
இதனிடையே இந்த புதிய ஒப்பந்தம் புதிய மற்றும் நவீன வசதிகளை கொண்ட விமானங்களில் பயணிகள் பயணிக்க ஒரு புது அனுபவத்தை தரும் என ஃளாய்துபாய் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி காயித் அல் காயித் கூறினார். இவ்விரு விமான நிறுவனங்களின் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரே டிக்கெட் முன்பதிவின் வழி உலகளாவிய நகர்களுக்கு பயணிகள் சிறகடிக்க முடியும் என்றார் அவர்.
அனைத்துலக பயணிகளுக்கு இது ஒரு நற்செய்தி என அவர் சுட்டிக் காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular