
ரொம்பின் ஜூலை 30
ஜெராம் பாடாங் வட்டார மக்களுக்கு உண்மையாக சேவை செய்து வரும் பிரதிநிதியை எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேர்வு செய்யும்படி இங்குள்ள வாக்காளர்களை இந்த தொகுதியின் பெர்சாத்து வேட்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் நாற்காலியை அலங்கரிக்கும் பிரதிநிதி இந்த தொகுதி மக்களுக்கு தேவையில்லை என்றார் அவர்.
இந்த தொகுதியில் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்குள்ள மக்களுடன் ஒன்றாக கலந்து உண்மை நிலையை தாம் தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தத் தேர்தல் களத்தில் தாம் குதித்துள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அலாவன்ஸ் மற்றும் இதுல சலுகைகளை பெறுவதற்காக தாம் போட்டியிடவில்லை என்றார் அவர்.
இங்குள்ள மக்களின் வேலை வாய்ப்பு, மாணவர்களின் கல்வி மற்றும் வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவை தமது முன்னுரிமை என அவர் சொன்னார்.
தாம் பிரதிநிதித்து போட்டியிடும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சாத்து அனைத்து இனங்களுக்கும் முன்னுரிமை வழங்கி வருகிறது.
ஆகையால் எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் மலாய், சீனி மற்றும் இந்திய வாக்காளர்கள் ஒன்று திரண்டு தமக்கு வாக்களிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
‘ என்னை உங்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யுங்கள், உங்களுக்காக மாநில சட்டமன்றத்தில் நான் குரல் கொடுப்பேன்’ என டத்தோஸ்ரீ சஞ்சீவன் உறுதியளித்தார்.


