
பெட்டாலிங் ஜெயா நவ 7
கட்சித் தலைவராக இல்லாவிட்டாலும் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நீடிக்கலாம் என பிகேஆர் பொதுச் செயலாளர் பூஸியா சாலே கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில் பிகேஆர் தலைவர் பதவியில் அன்வார் தொடர்ந்து நீடிப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தலைவர் பதவிக்கு ஒருவர் மூன்று தவணை காலம் தான் வகிக்க முடியும் என கட்சியின் சட்டம் அனுமதிப்பதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்வாதார துணையமைச்சரான அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்த கட்சித் தேர்தலுக்குப் பிறகு அன்வார் கட்சியின் தலைவராக அன்வார் நீடிப்பது இறுதி தவணை காலம் என்பதால் சில கேள்விகள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டு முதல் பிகேஆர் தலைவர் பதவியை அன்வார் வகித்து வருகிறார்.
‘அன்வார் விலகிக் கொள்ள மாட்டார் என நாம் கூறவில்லை. ஆனால் இதற்கு கட்சிகளை பாருங்கள், ஒருவர் எத்தனை தவணை காலம் தலைவர் பதிவில் நீடிக்கிறார் என்று’ என அவர் சுட்டி காட்டினார்.
ஆகையால் கட்சித் தலைவர் பதவி வகிக்காவிட்டாலும், பிரதமராக அன்வார் நீடிக்க முடியும் என்றார் அவர்.
அதே வேளையில் பாக்காத்தான் ஹராப்பன் கூட்டணியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மத்தியில் பிகேஆர் தலைமைத்துவ தேர்தல்கள் நடைபெற உள்ளன.


