
கோலாலம்பூர் ஜூலை 30
மலேசியாவிற்கு வரும் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சீனாவின் முன்னணி கட்டண சேவை நிறுவனமான
யீபே(YeePay) மற்றும் பாத்தேக் ஏர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் டிக்கெட் விநியோக தீர்வுகள் மூலம் சீனா மற்றும் மலேசியாவிற்கிடையிலான தொடர்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பயணத் தேவையை ஊக்குவிக்கிறது.
மேலும் சீனா-மலேசியா இடையிலான பரஸ்பர விசா இல்லாத பயனை ஏற்பாடு மற்றும் ‘விசிட் மலேசியா 2026’ ஆகிய திட்டங்களுக்கு பக்க பலமாக இந்த ஒப்பந்தம் அமைகிறது.
சீனப் பயணிகள் மலேசியாவிற்கு எளிதாகவும் வசதியாகவும் பயணம் செய்வதை உறுதி செய்வதோடு சீனா, மலேசியா மற்றும் ஆசியான் பிராந்தியத்தை இணைக்கும் முக்கிய விமான நிறுவனமாக பாத்தேக் ஏர் தனது நிலையை இதன்மூலம் மேலும் வலுப்படுத்துகிறது.
பரஸ்பர விசா இல்லாத திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்ந்து, மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக சீனா தொடர்ந்து விளங்கி வருகிறது.
பயணப் பழக்கவழக்கங்கள் டிஜிட்டல் மயமாகி வருவதால், பயனீடாளர்கள் தங்களுக்குப் பரிச்சயமான கட்டண முறைகளையும், தடையற்ற முன்பதிவு அனுபவத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.
பாத்தேக் ஏர் தற்போது கோலாலம்பூரிலிருந்து ஷாங்காய் மற்றும் குவாங்சோ உட்பட சீனாவில் 10க்கும் மேற்பட்ட நகர்களுக்கு நேரடி விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் யீபே நிறுவனம் பாத்தேக் ஏரின் டிஜிட்டல் கட்டணும் திறன்களை மேம்படுத்தி, சீனாவில் அதன் சந்தையை விரிவாக்க உதவும்.
இது சீனப் பயணிகள் மலேசியாவிற்கு எளிதாக முன்பதிவு செய்து வர வழி வகுக்கும்.

இந்த முயற்சி முன்பதிவு அனுபவத்தை மேம்படுத்துவதுடன், மலேசியாவின் சுற்றுலா இலக்குகளை ஆதரிக்கும் வகையில் சீன பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக சீனா தொடர்ந்து இடம் பிடித்து வருவதாக பாத்தேக் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி கூறினார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் முதல் பகுதியில் மட்டும் 2.17 மில்லியனுக்கும் அதிகமான சீன பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது முந்தைய ஆண்டை விட 35.6 விழுக்காடு அதிகமாகும் என்றார் அவர்.
விசிட் மலேசியா 2026 மற்றும் விசா இல்லாத பயண திட்டம் ஆகியவற்றால் சீனப் பயணிகளுக்கு பயணத்தை இன்னும் எளிதாக்க பிரிய வாய்ப்புகள் உள்ளன என அவர் குறிப்பிட்டார்.
யீபே நிறுவனத்துடனான இந்த கூட்டு ஒப்பந்தம், சீனப் பயணிகள் தங்களுக்கு பரிச்சயமான கட்டிட முறைகள் மூலம் எளிதாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய உதவும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே பாத்தேக் ஏர் விமான நிறுவனத்துடனா இந்த ஒப்பந்தம் யீபே-ன் உலகளாவிய விமான சேவைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என யீபே இணை நிறுவனர் யூ சென் கூறினார்.
விமான போக்குவரத்து கட்டண துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தை தங்களது நிறுவனம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


