
கோலாலம்பூர் நவ 5
மலேசிய சுங்கத்துறை இலாக்காவில் உதவி தொழில் நுட்ப தகவல் அதிகாரியான கோமதி சுப்பிரமணியம் சமூக பணிகளில் கௌரவ டாக்டர் விருது பெற்றார்.
இந்த விருப்பத்தை வடகிழக்கு அலாபாமா பல்கலைக்கழகம் தனது 2024 அனைத்துலக விருதளிப்பு நிகழ்ச்சியில் வழங்கியது.
அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் டாக்டர் கோமதி இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
தமது தீவிர சமூகப் பணிகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


