
சுபாங் நவ 5
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து(கேஎல்ஐஏ) அலோஸ்டாரின் சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலையத்திற்கான இந்த புதிய சேவை எதிர்வரும் 5 டிசம்பர் 2024-ல் தொடங்குகிறது.
கெடாவின் அற்புத பண்பாடு மற்றும் சுற்றுலா துறையை கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் கண்டுகளிக்க இந்த புதிய விமான சேவை ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
பாத்திக் ஏரின் உள்நாட்டு நகரங்களில் விரிவாக்கத்திற்கு இந்த கோலாலம்பூர்-அலோர் ஸ்டார் ஒரு மைல் கல் தான் என்று கூற வேண்டும்.
கெடாவில் காணப்படும் அழகிய நெல் வயல்கள், புராத சின்னமான இடங்கள், இயற்கை அழகை கொண்ட இடங்களை சுற்றி பார்க்க இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.

இந்த புதிய விமான சேவை சுற்று பயணிகள் மற்றும் வர்த்தக பயணிகளை அதிகம் கவரும்.
இதனிடையே இந்த புதிய விமான சேவை சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என பாத்திக் ஏர் விமான நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
வட மலேசியாவில் பாத்திக் ஏர் தனது விமான சேவையை விரிவாக்கத்தினால், உள்நாட்டு பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2025 கெடாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்திற்கு ஆதரவு வழங்குவது தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
மலேசியாவில் அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை புரியும் மாநிலங்களில் கெடா 5 ஆவது நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியா புள்ளி விவரம் இலாவின் அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் 6.45 மில்லியன் சுற்றுப்பயணிகள் கெடாவிற்கு வருகை புரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாத்திக் ஏரின் கோலாலம்பூர்-அலோர் ஸ்டார் விமான சேவை வாரத்திற்கு 7 முறை மேற்கொள்ளப்படும்.
இந்த சேவைக்கு பாத்திக் ஏர் தனது போயிங் 737 ரக விமானத்தை பயன்படுத்தும்.


