
கோலாலம்பூர் நவ 5
மலேசியாவில் தனது பயணிகள் விற்பனை முகவராக ஒஸ்கார் டிராவல்ஸ் செர்விஸஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைநகர் ஜாலான் அம்பாங்கில் இந்த புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு அக் 30 ஆம் தேதி நடைபெற்ற இந்த அலுவலக திறப்பு விழாவில் மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என் ரெட்டி மற்றும் மலேசிய சுற்றுலாத்துறை வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டெல்லி மற்றும் கோலாலம்பூருக்கு இடையிலான தினசரி நேரடி விமான சேவை கடந்த 15 செப்டம்பர் 2024-ல் ஏர் இந்தியா தொடங்கியது.

இந்த நேரடி விமான சேவைக்கு ஏர்பாஸ் A 320 neo விமானத்தை ஏர் இந்தியா பயன்படுத்துகிறது. இந்தியா நகரங்களிலிருந்து தென்கிழக்கு ஆசியாவில் 6 நகரங்களுக்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் கோலாலம்பூர், பேங்காக்,ஹோ சி மின் சிட்டி, புக்கெட், சிங்கப்பூர் மற்றும் யாங்கூன் ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா சிறகடிக்கிறது.
ஏர் இந்தியா 41 விமானங்களைக் கொண்டு 30 நாடுகளில் 49 உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் 41 அனைத்துலக விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே டில்லி-கோலாலம்பூர் கான இந்த நேரடி விமான சேவை, சுற்றுலா மற்றும் வர்த்தகப் பயணிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என ஒஸ்கார் ஹோலிடேய்ஸ் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் ஜோன்ஸன் பிரான்சிஸ் கூறினார்.

தனது பயணிகளுக்கு தரமான சேவையை வழங்குவதில் தமது நிறுவனம் முன்னுரிமை வழங்கி வரும் என்றார் அவர். தமது நிறுவனத்தின் அனுபவம் மற்றும் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு தான், தனது பயணிகள் விற்பனை முகவராக ஒஸ்கார் ஹோலிடேய்ஸ் குழும நிறுவனத்தை ஏர் இந்தியா நியமனம் செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


