Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மாணவர்களுக்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம்

கடந்த 25ம் தேதி, Hicom தமிழ்ப்பள்ளியில், ஜொகூர், குளுவாங்,ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில், மலேசிய இந்து தர்ம மாமன்றம் ஆதரவோடு, Hicom தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தோடு இணைந்து மாணவர்களுக்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம் புத்தகம் வழங்கப்பட்டது.

வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 8ம் தேதி கந்த சஷ்டி நாள் அனுசரிக்கப்படவுள்ளது. அதை முன்னிட்டு,
கந்தர் சஷ்டி ஆறு நாட்களிலும் படிப்பதற்க்கு ஏதுவாக மாணவர்களுக்கு கந்த சஷ்டி புத்தகம் வழங்கப்பட்டது.

பாலகணேஷ் பொன்னையா, ஜொகூர், குளுவாங்,ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் செயலாளராக பொறுப்பு வகிக்கும் அவர், மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த கந்த சஷ்டி புத்தகத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவதாக கூறினார். அதற்காக ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் தலைவர் கணேசனின் உதவியோடும், மலேசிய இந்து தர்ம மாமன்றமும் ஒத்துழைப்போடு நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் வழங்க ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்து மாமன்ற ஆலோசகர் டத்தோ டாக்டர் என் எஸ் ராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாக இவ்விழாவை தொடக்கி வைத்தார். இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், நம் நாட்டின் கோட்பாடு பின்பற்றும் வகையில், மாணவர்களுக்கு சிறந்த வாழ்வியல் வழிகாட்டி புத்தகமாக இருக்கும் என ஜக்கோம் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவி மேகலா தெரிவித்துள்ளார். அதேவேளையில், தீபாவளிக்கு சங்கத்தின் வாயிலாக மாணவர்களுக்கு பலகாரம் மற்றும் அன்பளிப்பும்

வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மலேசியா, இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், மலேசியா, இந்து தர்ம மாமன்றத்தின் துணை தலைவர் ரிஷி, புகைப்பட வடிவமைப்பாளர் ரமேஷ்,ஜக்கோம் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்யோகநாயகி இன்னும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular