
இந்த இந்த தீபத் திருநாளை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் மற்றும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும் என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தமது தீபாவளி வாழ்த்து செய்தியில் கேட்டுக்கொண்டார்.
குடும்பத்தார், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் இந்த தீபத் திருநாளை குடும்ப உணர்வோடு கொண்டாட வேண்டும் என்றார் அவர்.
பகைகளை மறந்து கருத்து வேறுபாடுகளை கலைந்து சந்தோஷத்துடன் கொண்டாடும் திருநாள் இது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் மலேசிய இந்தியர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் நாம் ஆதரவு வழங்க வேண்டும் என தமது வாழ்த்து செய்திகள் அவர் கேட்டுக் கொண்டார்.


