Tuesday, May 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

குழந்தையே பொறந்துருச்சு.. நயன்தாரா திருமண வீடியோவின் ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடைகளைத் தாய் மூலம் பெற்ற, உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்றார்கள் என்று செய்திகள் பரவின.

கடந்த இரண்டு வருடங்களாக அந்த வீடியோ வெளியாவது குறித்து எந்த தகவலும் நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து வராத நிலையில் தற்போது அந்த வீடியோ நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular