Tuesday, May 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்

கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாக கூறி தனது ரசிகரைக் கொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் தர்ஷனின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே, முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமின் கோரி கடந்த மாதம் தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து கர்நாடகா ஐகோர்ட்டு தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமின் மனு நேற்று விசாரித்து முடிக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் , ஒரு வாரத்துக்குள் தர்ஷனின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவும், சிகிச்சைக்கு எவ்வளவு காலம் தேவை என்பதை குறிப்பிடவும் உத்தரவிட்டார். தர்ஷனின் பாஸ்போர்ட்டை விசாரணை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular