
நாட்டின் திரையுலகில் முன்னணி இளைய இயக்குனர்களில் ஒருவரான என்.பி. ராஜேந்திரனின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இணைய தொடர் துரிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த இணையதொடர் தயாரிப்பு சுமார் 80 விழுக்காடு முழுமையடைந்து விட்டதாக நாட்டின் திரையுலகின் இளைய இயக்குனர் என்.பி. ராஜேந்திரன் கூறினார்.
‘அஸ்ட்ரோ வானவில் சிறந்த குறும்பட விருதை பெற்ற எனது தயாரிப்பின் துர்கா 1.0 மற்றும் ஜொகூர் பாரு எல்எப்எஸ் சினிமா திரையரங்கில் திரையிடப்பட்ட துர்கா 2.0 குறும்படத்தை தொடர்ந்து இந்த இணைய தொடரை நான் ஆரம்பித்துள்ளேன்’ என்றார் அவர்.
இணைய உலகத்தின் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும் இந்த இணைய தொடர் சித்தரிக்கிறது.
பொதுவாக இணைய உலகம் மக்களுக்கு பெரும் நன்மையை தந்து வருகிறது என்பதை அனைத்து மக்களின் கருதி வருகின்றனர்.
ஆனால் இணைய உலகத்தின் மறுபக்கத்திலும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை இந்த இணைய தொடர் சித்தரிக்கிறது.

மனித பேராசையால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இந்த இணைய தொடர் வெளிப்படுத்துகிறது என அவர் சொன்னார்.
இந்த இணைய தொடரில் நடிக்கும் நடிகர்கள் தர பரிசோதனைக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திரையரங்கில் மக்களின் தேவை என்ன என்பதை சித்தரிக்கும் வகையில் இவர்களின் நடிப்பாற்றல் இருக்க வேண்டும் என்பதே தமது பிரதான நோக்கம் என்றார் அவர்.
இந்த இணைய தொடரின் படப்பிடிப்பு ஆகஸ்டு 2024 ஆம் ஆண்டில் தொடங்கி 2025-ல் இதுவரை சுமார் 80 விழுக்காடு நிறைவு பெற்றுவிட்டன.
இவ்வாண்டு இறுதியில் இந்த படம் திரையரங்கில் பிரதான வெளியிடப்பட வேண்டும் என்பதே தமது இலக்கு என அவர் சொன்னார்.
இதைத்தொடர்ந்து இந்த இணைய தொடர் யூடியூப் சேனலில் வெளியீடு காண வேண்டும் என்பதே தமது ஆசை என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த இணை தொடரில் இளங்கோவன், என்.பி. ராஜேந்திரன், சதீஷ் ரோய், நிஷா, காவேரி, ஹம்ஸா,சிந்தியா, வேணி, நேஷா,சில்வா, அர்புதம், மதுரா, பரமேஸ்வரி, தர்கிஸ் காயத்ரி, கோபி,தேவ், மலர், தேவேந்திரன், தர்ஷினி,ஆர்கே,கிரேஸ், ஜெயந்தி, டாக்டர் கிஷென், எம்ஜிஆர் காந்தி, இவான் சரேஸ்,அனிதா ஆகியோர் தங்களின் நடிப்பு திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த திரையில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் கலைஞர் ரமேஷ்வரா சிறப்பாக தோன்றுகிறார்.
இந்த இணய தொடருக்கு இளங்கோவன் NEA AGENCY பிரதான ஆதரவை வழங்கி வருகிறார்.
கலைஞர்களின் ஆதரவு RV Modeling Bootcamp நிறுவனத்தைச் சார்ந்த சகாதேவன், கெவின் சேகர், பவித்ரா, நந்தகுமார் மற்றும் ஜெயா.

தமது RJ FILMS & PRODUCTION நிறுவனத்தின் தயாரிப்பிலான இந்த குறும்படம் மக்களின் மனதை கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த குறும்படத்தின் உதவி இயக்குனர் நிஷா.
இந்த சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் லாபத்தை கருத்தில் கொண்டு இதில் பங்கு பெறவில்லை.
சினிமா திரை உலகில் கால் பதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இவர்கள் இந்த இணைய தொடரில் நடிக்க முன்வந்துள்ளனர் என்.பி ராஜேந்திரன் பெருமிதம் கொண்டார்.

தமது அடுத்தடுத்த இயக்கத்தில் இளைய இந்திய கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது தமது விருப்பம் என்றார் அவர்.


