
உலகமே உற்று நோக்கும் பிரிட்டிஷ் பெருமையின் சின்னமாக விளங்கும் பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace) இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் உற்று நோக்கி ஈர்து வருகின்றது.
பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace) 1703 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இதை கட்டங் கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது என்ற தகவல் அரண்மனையில் கிடைக்கப்பெற்றது.
இது கட்டப்பட்ட காலத்தில் அடிமை முறை இருந்ததால், கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சிலர் விபத்துகளில் பெரும்பாலோர் உயிரிழந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால்,எவ்வளவு பேர் உயிரிழந்தார்கள் என்பதற்கான சரியான கணக்கு அரசுப் பதிவுகளில் இல்லை இருந்தாலும், 200 ஆண்டுகளுக்கும் மேலாக கைவினைக் கலைஞர்களின் உழைப்பில்தான் இந்த கம்பீரம் உருவானது.

அரண்மனையின் பரப்பளவு 39 ஏக்கர் அதாவது சுமார் 20 கால் பந்து மைதானம் சேர்ந்த அளவு இருக்கும் -775 அறைகள், அதில் 19 அரச அறைகள், 52 ராஜா ராணி படுக்கை அறைகள், 188 ஊழியர் அறைகள், 78 குளியல் அறைகள், 92 அலுவலகங்கள், சொந்த தபால் அலுவலகம், சினிமா தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், எல்லாமே உள்ளே உள்ளன. பின்னாடி 40 ஏக்கர் தோட்டம் லண்டன் மையத்தில் இருக்கும் ஒரு சின்ன காடு மாதிரி இருக்கின்றது.
அதிகார மையம், இதுதான் பிரிட்டன் மன்னரின் அதிகாரபூர்வ அலுவலகம், பிரதமர், வெளிநாட்டு அதிபர்கள், தூதர்கள் இங்குதான் சந்திக்கின்றார்கள்.
நாட்டின் முக்கிய முடிவுகள் இங்கிருந்துதான் ஆரம்பம்.
இரண்டாம் உலகப்போர் நேரத்தில் 1940இல் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாசி விமானப்படை அரண்மனையின் மேல் குண்டு வீசியது.
அந்த நேரத்தில் ராணி எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் தான் இருந்தார்.
மொத்தம் ஒன்பது முறை குண்டு வீசப்பட்டு பக்கிங்ஹாம் அரண்மனை முழுவதும் அளிக்கப்பட்டது. அரசு குடும்பம் யாரும் சேதம் இல்லாமல் உயிர் தப்பினர்.

பக்கிங்ஹாம் அரண்மனையின் மற்றுமொரு உலகப் புகழ்பெற்ற அம்சம் அங்குள்ள அரண்மனை காவலர்கள் ஆவார். ராணுவ வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து நடந்து செல்வதும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன. பக்கிங்ஹாம் அரண்மனையின் மிகப்பெரிய ஈர்ப்பு இது தான்.
சிவப்பு சீருடை, கருப்பு கரடி தொப்பி அணிந்த ராணுவ வீரர்கள்.
டிரம்ஸ், பேக்பைப் இசையுடன் அடி தவறாமல் அணிவகுத்து வருகின்றார்கள். மணிக்கணக்காக நின்றாலும் அசையாமல் காவல் காக்கின்றார்கள்.
இவர்களின் அந்த ஒழுக்கமும், கம்பீரமும் ,அழகான அணிவகுப்பும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இது வெறும் சடங்கு அல்ல 360 ஆண்டுகளாக தொடர்ந்து பிரிட்டிஷ் ராணுவ பாரம்பரியமாகும்.
பக்கிங்ஹாம் அரண்மனை மீது விழுந்த ஒவ்வொரு குண்டும் பிரிட்டனை உடைக்க நினைத்தது, ஆனால் அந்த குண்டுளே பிரிட்டிஷ் மக்களின் ஒற்றுமையை இன்னும் வலுவாக்கியது.
அரண்மனை இடிந்தாலும் ஒரு தேசத்தின் கம்பீரம் இடியவில்லை.

- வான் தொடும் வாயிலில் வேங்கைகள் காக்க
- பொன் முடிசூடிய புகழின் பீடம் !
- வரலாறு காணும் வைர மாளிகை
- அரண்மனை வாசல் அனைவருக்கும் திறக்கட்டும்.
- பக்கிங்ஹாம் என்னும் பார் போற்றும் பெருமை!
- அரண்மனை வாசல் அனைவருக்கும் திறக்கட்டும்.
- வரலாறு காணும் வைர மாளிகை
- பொன் முடிசூடிய புகழின் பீடம் !
அலைஓசையின் ஆசிரியரும், மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அழகேசு, கடந்த வாரம் லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நேரில் சென்று பார்வையிட்டப்பட்டது. அப்போது, அரண்மனையின் கட்டிடக்கலை, வரலாற்றுப் பின்னணி மற்றும் அதன் சிறப்பம்சங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அங்கிருந்து பெறப்பட்டவை.


