
ஜொகூர் பாரு, செப் 28
குறிப்பாக ஜொகூர் மாநில மஇகா மகளிர் அணி நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளின் சிறந்த அறிவிப்பாளராக கூலாய் தொகுதி மஇகா மகளிர் அணியின் செயலாளர் புவனேஸ்வரி பெருமாள்(தமிழச்சி) கௌரவிக்கப்பட்டார்.
நேற்று செப் 27 ஞாயிற்றுக்கிழமை ஜொகூர் மஇகா மகளிர் அணியின் 40 ஆம் ஆண்டு பேராளர்கள் மாநாட்டில் ஜொகூர் மஇகா மகளிர் அணியின் கலாச்சாரப் பிரிவு நிர்வாக செயலாளருமான இவருக்கு இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.
ஜொகூர் மஇகா மகளிர் அணி தலைவி மல்லிகா பாலகிருஷ்ணன் இவரை கௌரவித்தார்.
ஜொகூர் மஇகா துணைத் தலைவர் டத்தோ நிலா ராஜா மற்றும் தேசிய மஇகா மகளிர் அணி தலைவி சரஸ்வதி முன்நிலையில் இவர் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் கூலாய் தொகுதி மஇகாவில் ஒரு சாதாரண உறுப்பினராக இருந்து வந்த இவரை, அப்போதைய இந்த தொகுதி தலைவர் சுப்பையா சோலைமுத்து, நிகழ்ச்சி அறிவிப்பாளராக வழிநடத்த இவருக்கு வாய்ப்பளித்தார்.
அன்று முதல் ஜொகூர் மஇகா மகளிர் அணி நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராக புவனேஸ்வரி தொடர்ந்து பிரகாசித்து வந்தார்.
கடந்த 2020 ஜொகூர் மாநில மஇகா பேராளர்கள் மாநாட்டின் அறிவிப்பாளராக இவர் தமது பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் குறிப்பாக தேசிய மஇகா மகளிர் அணி அமைப்புச் செயலாளர் வசந்தி மற்றும் மகளிர் அணியின் உச்ச மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் புவனேஸ்வரி தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



