
ஆசியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனம் என்ற விருதை 14ஆவது முறையும், முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவன கேபின் குழுவுக்கான விருதை தொடர்ந்து 10ஆவது ஆண்டும் ஏர் ஆசியா வென்றது
கோலாலம்பூர், 28 செப்டம்பர் 2026 — மாலத்தீவில் நேற்று நடைபெற்ற World Travel Awards Asia, Oceania & Indian Ocean 2026 விருது விழாவில் ஏர் ஆசியா இரண்டு முக்கிய விருதுகளை வென்றுள்ளது.
ஏர் ஆசியா 2026ஆம் ஆண்டின் ஆசியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனம் (Asia’s Leading Low-Cost Airline) என்ற விருதை 14ஆவது முறையாகவும், ஆசியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவன கேபின் குழு (Asia’s Leading Low-Cost Airline Cabin Crew) என்ற விருதை தொடர்ந்து 10ஆவது ஆண்டாகவும் பெற்றுள்ளது.
ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் 130க்கும் மேற்பட்ட இடங்களை இணைக்கும் விரிவான விமானப் போக்குவரத்து வலையமைப்புடன், தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வரும் ஏர் ஆசியா, தென்கிழக்காசியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
ஏர் ஆசியா மக்கள் மற்றும் நகரங்களை இணைத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், இதுவரை கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பயணிகளை தனது விமானங்களில் அழைத்துச் சென்றுள்ளது. இது அதன் விரிவான வலையமைப்பையும், பல ஆண்டுகளாக பயணிகளிடம் உருவாக்கியுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
தொடர்ச்சியான விமானப் பாதை விரிவாக்கம் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகள் மூலம், பிராந்திய மற்றும் சர்வதேச இணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மில்லியன் கணக்கான பயணிகளுக்கு விமானப் பயணத்தை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் ஏர் ஆசியா தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

ஏர் ஆசியா குழுமத்தின் கேபின் குழுத் தலைவரான சுஹைலா ஹசன் கூறுகையில்:
இந்த அங்கீகாரம் ஏர்ஏசியாவுக்கும் எங்கள் கேபின் குழுவினருக்கும் மிகப் பெரிய கௌரவமாகும். எங்கள் தொழில்முறை அணுகுமுறை, அர்ப்பணிப்பு மற்றும் உண்மையான அக்கறை ஆகியவையே ஏர் ஆசியா பயண அனுபவத்தின் அடிப்படையாக உள்ளன.»
குறைந்த கட்டண விமானப் பயணம் என்றாலும், அதனுடன் சிறந்த விருந்தோம்பலும் கவனமான சேவையும் எப்போதும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பெண் கேபின் குழு உறுப்பினர்களுக்கான ஹிஜாப் அணியும் விருப்பமும், அனைவரையும் உள்ளடக்கிய பணிச்சூழலுக்கும், ஊழியர்கள் தங்களது தனித்துவத்துடன் செயல்படுவதற்குமான எங்கள் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்த விருது எங்கள் ‘Allstars’ குழுவினரின் உழைப்பையும், மில்லியன் கணக்கான பயணிகளின் நம்பிக்கையையும் கொண்டாடுகிறது.”
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KUL) ஏர்ஏசியா முக்கிய விமான நிறுவனமாக இருந்து வருவதாகவும், அங்கு நடைபெறும் விமானங்களின் 34 சதவீதத்தை ஏர் ஆசியா கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் KUL, OAG வெளியிட்ட 2026 Megahubs Index அறிக்கையின்படி, உலகின் நான்காவது அதிக இணைப்புகளைக் கொண்ட சர்வதேச விமான மையமாகவும், உலகின் நம்பர் 1 குறைந்த கட்டண விமான மெகா-ஹப்பாகவும் தனது நிலையைத் தக்க வைத்துள்ளதாக அவர் கூறினார்.
World Travel Awards நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் கிரஹாம் இ. கூக் கூறுகையில்:
2026 World Travel Awards-ல் இந்த சிறப்பான இரட்டை சாதனையைப் பெற்ற ஏர்ஏசியாவுக்கு வாழ்த்துகள். குறைந்த கட்டண விமானப் பயணத்தில் ஏர்ஏசியாவின் தலைமைத்துவம், தொடர்ச்சியான புதுமைகள், வலுவான இணைப்புகள் மற்றும் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.

«இந்த வெற்றி, அதன் ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கும், ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் விமானப் பயணத்தை அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர்களின் பங்களிப்புக்கும் சான்றாகும்.”»
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, World Travel Awards உலகளாவிய பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள பயணத் துறை வல்லுநர்கள் மற்றும் பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் விருது வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் மூலம் தொழில்துறை அங்கீகாரத்தையும் பயணிகளின் நம்பிக்கையையும் இந்த விருதுகள் பிரதிபலிக்கின்றன.
தற்போது கிடைத்துள்ள இந்த இரட்டை அங்கீகாரம், வலுவான விமான இணைப்புகள், புதுமைகள் மற்றும் பயணிகளுக்கு சிறந்த மதிப்பு மற்றும் சேவையை வழங்குவதில் கொண்டுள்ள கவனம் ஆகியவற்றின் மூலம் குறைந்த கட்டண விமானப் பயணத் துறையில் ஏர் ஆசியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.


