Thursday, July 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி,தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ உடன் மோதினார்….

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்….

முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்….

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காயத்தால் முதல் சுற்றோடு வெளியேறியது….

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி இன்று நடந்த 2வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறின…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular