Sunday, July 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

KWAP முதலீட்டு விவகாரத்தில் அன்வாரை தற்காத்தார் விக்னேஸ்வரன்!

சிரம்பான் ஜெயா 23
KWAP முதலீட்டு விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தற்காத்து பேசினார்.
KWAP முதலீட்டு விவகாரத்திற்கு பொறுப்பேற்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பாஸ் இளைஞர் பிரிவு தலைவரின் அறிக்கை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர்.
ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அந்நபர் நிரபராதியே என அவர் சுட்டிக் காட்டினார்.
இதே போல் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடிக்கும் அன்வார் அந்த வாய்ப்பை வழங்கினார்.
அந்த நேரத்தில் ஸாஹிட் 47 நீதிமன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருந்தார் என அவர் தெரிவித்தார்.
ஆகையால் பாஸ் இளைஞர் பிரிவு தலைவரின் அறிக்கை கண்டிக்கத்தக்கது என அவர் சுட்டி காட்டினார்.
இது மாநிலத் தேர்தல் என்பதால் இந்த விவகாரத்தை இங்கு கொண்டுவரக் கூடாது என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular