
சிரம்பான் ஜூலை 23
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் 2 திறமையான வேட்பாளர்களை மஇகா நிறுத்தியுள்ளதால் அவர்களை வெற்றி பெறச் செய்வோம் என கட்சியின் உதவி தலைவர் டத்தோ அசோஜன் வலியுறுத்தினார்.
சிரம்பான் ஜெயாவில் டத்தோ தினாளன் ராஜகோபால் மற்றும் ஸ்ரீ தஞ்சோங்கில் அச்சுதன் ஆகிய கட்சியை வேட்பாளர்களை வெற்றியடை செய்வது இந்திய சமூகத்தின் கடமையாகும் என்றார் அவர்.
குறிப்பாக தாம் பொறுப்பேற்றிரருக்கும் சிரம்பான் ஜெயா தொகுதியில் 45 விழுக்காடு சீன,28 விழுக்காடு இந்திய மற்றும் மீதம் மலாய் வாக்காளர்கள் உள்ளதால் இது ஒரு எளிதான தொகுதி அல்ல என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தொகுதி கடந்த நான்கு தவணைகளாக ஜசெக கோட்டையாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் இத்தொகுதியில் மஇகா வேட்பாளரின் வெற்றிக்கு இந்திய வாக்குகள் முக்கிய பங்காற்றும் என்றார் அவர்.
இந்த தொகுதியில் 28 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் என்பதால், நமது வேட்பாளரின் வெற்றியை இவர்கள் தான் நிர்ணயம் செய்வர் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் இந்திய வாக்காளர்கள் தினாளனின் வெற்றிக்கு பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் நாம் 100 விழுக்காடு வெற்றியை அடைந்தோம்.
அதே போல் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றியை நாம் அடைய வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



