
ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் பெர்லிங் தொகுதி இந்திய சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதி என மஇகா உதவி தலைவர் டத்தோ அசோஜன் கூறினார்.
ஜொகூர் பாரு மாநகரில் உள்ள பெர்லிங் தொகுதியில் போட்டியிட முதல் முறையாக மஇகாவிற்கு ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தொகுதியில் தான் இந்தியர்களின் முக்கிய வர்த்தக மையங்கள் உள்ளன என்றார் அவர்.
ஸ்கூடாய் சுத்தரா பேரங்காடியிருந்து ஜொகூர் பாரு ராஜ மாரியம்மன் ஆலயம் வரை இந்த பெர்லிங் தொகுதி விஸ்தரித்துள்ளது.
இந்த தொகுதியில் ராஜமாரியம்மன் ஆலயம் உட்பட முக்கிய ஆலையங்கள் உள்ளன. அதிகமான இந்திய சமூகத்தினர் நடமாடும் இடம் இதுவாகும்.
இந்த தொகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
பெர்லிங் தொகுதியில் மொத்தம் 109,000 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தொகையில் 14.7 விழுக்காடு அல்லது 14,895 இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.
ஆகையால் இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை இந்திய வாக்காளர்களே முடிவு செய்வர்.
இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளரான மஇகாவின் பன்னீர்செல்வத்தை நாம் நிச்சயம் வெற்றி அடையச் செய்ய வேண்டும் என டத்தோ அசோஜன் கேட்டுக்கொண்டார்.
வரும் ஜூலை 11 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிடும் பன்னீர் செல்வத்திற்கு இந்திய வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.


