Tuesday, July 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜொகூர் தேர்தலில் நியமன சட்டமன்ற பதிவிகளை பாஸ் கட்சிக்கு வழங்க தேமு ரகசிய திட்டம்?

வரும் ஜூலை 11 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தான் தோல்வியுற்றால் ஆட்சியை அமைக்க,5 நியமன சட்டமன்ற பதிவுகளை பாஸ் கட்சிக்கு வழங்க மாநில தேசிய முன்னணி ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக பாக்காத்தான் ஹராப்பான் ஸ்கூடாய் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயராமன் சாடினார்.
இந்த தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால், நியமன சட்டமன்ற பதவி எதுவும் வழங்கப்படாது என மாநில மந்திரிப்பார் டத்தோ ஒன் ஹபிஸ் கஸாலி ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் திரைக்குப் பின்னால் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வரும் சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஜொகூர் சட்டமன்றத்தில் 5 நியமன பதவிகள் நியமனம் செய்ய கடந்த மே மாதம் ஜொகூர் மாநில சட்டமன்றத் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஜொகூர் மாநில அம்னோ மாநில அரசாங்கத்தை அமைக்க சதி திட்டம் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular