
வரும் ஜூலை 11 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 மஇகா வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஆனந்தன் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
கெமெலா தொகுதியில் போட்டியிடும் நடப்பு மாநில பராமரிப்பு அரசாங்கத்தின் ஆட்சி குழு உறுப்பினர் ரவீன் குமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் இறங்கினார்.
ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபிஸ் கஸாலி தலைமையிலான மாநில அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சீரான, சிறப்பான மற்றும் நிலையான ஆட்சி வழங்கி வரும் ஜொகூர் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு இந்திய சமூகத்தினர் தொடர்ந்து பிளவு படாத ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் தேசிய முன்னணி அரசாங்கம் இதுவரை அமலாக்கம் செய்துள்ள மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மக்களிடையே அவர் விளக்கினார்.

ஜொகூர் மாநில அரசாங்க ஆட்சி குழு உறுப்பினராக இருந்து வரும் ரவீன் குமார் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு அதிக நன்மைகளை செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் வரும் தேர்தலில் ரவீன் குமார் அதிக பெரும்பான்மை வாக்குகளில் இங்குள்ள இந்திய வாக்காளர்கள் வெற்றி அடையச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகா ஜொகூர் இந்தியர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வந்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த நிலையில் மஇகாவை பிரதிநிதித்து போட்டியிடும் 4 வேட்பாளர்களையும் வெற்றி அடையச் செய்வது இந்திய வாக்காளர்களின் கடமையாகும் என அவர் சொன்னார்.



