Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழாவில் திரண்ட பொதுமக்கள் 

அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழா நேற்று மாலை கோலாலம்பூர் மாசா பல்கலைக் கழகத்தின் பன்னோக்கு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  பொதுமக்கள் ஆர்வத்தோடு திரண்டு வந்தனர். 

மாலை 5.30 மணிக்கு தொடங்கிய விழாவில் பெரஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி வரவேற்புரையாற்றினார். 

முதலில் மனிதநேயம் போதித்த மாநபி (ஸல்) எனும் தலைப்பில் உஸ்தாத் மௌலவி முஹம்மது சாலிஹ் மன்பயீ உரை நிகழ்த்தினார். 

பன்முக சமூகத்தில் பெருமானார் (ஸல்) எனும் தலைப்பில் அல்ஹாபிழ் மௌலவி Dr. S.A. செய்யது இபுறாஹீம் அல்புஹாரி உரையாற்றினார். 

May be an image of 1 person, dais and text

மக்ரிப் தொழுகை இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்த இரண்டாவது அமர்வு ஹாஜி செய்யது அலியின் பெருமானாரை புகழும் பாடலோடு துவங்கியது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய கல்வி வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி முஹம்மது இக்பால் பேசும்போது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள முஃப்தி சட்ட மசோதாவின் உள்ளர்த்ததை சுருக்கமாக விளக்கி பேசினார். 

500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழா 2024 மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது என்று பெர்மிமின் தலைவர் ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன் மகிழ்ச்சியுடன் கூறினார். பெர்மிம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய சமூக பொருளாதார மேம்பாட்டு நிதியை பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு மீண்டும் நினைவுறுத்தினார். இந்த நிதி மக்களால் மக்களுக்கு உதவி செய்யும் ஓர் உன்னதமான நபி வழி என்று அறிவுறுத்தினார்.  

பெர்மிம், எம்.எம்.ஒய்.சி, ப்ரெஸ்மா, மாவார், சிம்ஸ், இஸ்லாமிய கல்வி வாரியம் போன்ற அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டனர். 

மாசா பல்கலைக் கழக நிறுவனர் பேராசிரியர் டாக்டர் டான்ஸ்ரீ முஹம்மது ஹனிபா நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular