Monday, June 8, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உலக அமைதி பிரார்த்தனை நிகழ்வில் குணா கலந்து கொண்டார்!

உலக அமைதிக்காக நடத்தப்பட்ட உலக அமைதி பிரார்த்தனை நிகழ்வில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ப. குணசேகரன் கலந்து சிறப்பித்தார்.
இந்த சிறப்பு பிரார்த்தனை பூஜை இங்கு உள்ள கோலா கெலாவாங் ஸ்ரீ கணபதிஸ்வரன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜெலுபு கோலா கெலாவாங் சமூக நல சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் வெ5,000 நன்கொடை வழங்கினார்.
சங்கத்தின் உதவி தலைவர் சூரியகுமார் மற்றும் பொருளாளர் ஜெயமலர் ஏற்பாட்டில் இந்த பிரார்த்தனை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனிடையே உலக அமைதிக்கு இதுபோன்ற பிரார்த்தனை நிகழ்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என டத்தோ குணா கேட்டுக்கொண்டார்.
மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடாணி அரசாங்கம், மாநில மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாநில மக்களுக்கு இந்த அரசாங்கம் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகையால் மக்களின் பிளவுபடாத ஆதரவு தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular