
மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது தொடர்ந்து, நெகிரி செம்பிலான் பாக்காத்தான் ஹராப்பான் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந்த நிலையில் நெகிரி செம்பிலான் பாக்காத்தான் ஹராப்பானின் மாநில தேர்தல் இயந்திர தொடக்க விழா இன்று 12 ஜூன் 2026 வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு சிராம்பான் கரிஸ்மா அரங்கில் நடைபெறவிருக்கிறது.
இந்த தொடக்க விழாவில் பாக்காத்தான் ஹராப்பானின் பிரதான தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்த விழாவில் பிரதமரும் பாக்காத்தான் ஹராப்பானின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், போக்குவரத்து அமைச்சரும் ஜசெக பொதுச் செயலாளருமான அந்தோனி லோக், மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண்,அமானா தலைவர் முகமட் சாபு, நெகிரி செம்பிலான் ஜசெக துணைத் தலைவரும் சிராம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ குணசேகரன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த கூட்டத்தில் திரண்டு வந்து கலந்து கொள்ளும்படி டத்தோ குணசேகரன் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு செய்துள்ள சேவைகள் குறித்து இந்த தலைவர்கள் தெளிவான விளக்கத்தை தரவிருக்கின்றனர்.


